கோவையில் இரு சக்கர வாகன ஒர்ஷாப்பிற்குள் புகுந்து இளைஞரை அரிவாளால் வெட்டும் போதை ஆசாமிகள்..!

புகாரின் பேரில் பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கடைக்குள் புகுந்து அரிவாளால் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.



கோவை: கோவையில் இருசக்கர வாகன ஒர்க் ஷாப்பிற்குள் புகுந்து இளைஞரை போதை ஆசாமிகள் வெட்டிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு காந்திமாநகர் பகுதியில் எஸ்.எஸ்.பைக் பாயின்ட் என்ற பெயரில் ஓர்க்‌ஷாப் நடத்தி வருபவர் ஷெரிப். இவரிடம் வேலை பார்த்து வருவர் ரவிக்குமார்.

நேற்று மாலை ரவிக்குமார் மட்டும் ஓர்க்‌ஷாப்பில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் 3 பேருடன் ஓர்க்‌ஷாப்பிக்கு வந்துள்ளார். அனைவரும் குடிபோதையில் இருந்த நிலையில் வாகனம் தொடர்பாக உரிமையாளரிடம் பேச வேண்டும் என சொல்லி இருக்கின்றனர்.

தனது செல்போன் மூலம் ஷெரிப்பிடம் பேசிய அவர்கள், பின்னர் செல்போனை திருப்பிக் கொடுக்காமல் பாக்கெட்டில் வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஓர்க்‌ஷாப் தொழிலாளி ரவிக்குமார் தனது செல்போனை திருப்பி கொடுக்கும்படி கேட்கவே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.



இதில் போதையிலிருந்த நபர்கள் ஓர்க்‌ஷாப்பில் இருந்த அருவாளை எடுத்து ஊழியரின் கையினை வெட்டினர்.



இதில் ரவிக்குமார் கையில் பலத்த காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.



இது தொடர்பாக ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கடைக்குள் புகுந்து அரிவாளால் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...