கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு..!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுவினர் கோவையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, மேம்பாலம், கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுவினர் கோவையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, மேம்பாலம், கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.



அதன் ஒரு பகுதியாக அவினாசி சாலை, விமான நிலைய சந்திப்பு அருகில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் கோல்ட்வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணியை ஆய்வு மேற்கொண்டனர்.



அரவிந்த் மருத்துவமனை அருகே மேம்பால பணிகள் எந்த அளவிற்கு முடிக்கப்பட்டுள்ளது. பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்த விளக்க புகைப்படங்களைப் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.



தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு தலைவர், கோவி செழியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், உறுப்பினர்கள் கதிரவன், கிரி, கோவிந்தசாமி, சங்கர், சந்திரன், செந்தில்குமார், பிரபாகர ராஜா, மாங்குடி உள்ளிட்டோரும், கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார், வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து, டைட்டில் பார்க் அருகில் BT சாலை அமைக்கும் பணி, வெள்ளலூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி சிங்காநல்லூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள், 63-வது வார்டு ஜோதி நகரில் மழைநீர் வடிகால் புனரமைப்பு பணிகளை பார்வையிட உள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...