பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதம் உயர்த்திட சிறப்பாக செயலாற்றி வரும் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் விருது வழங்கி பாராட்டு

பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக முயற்சியில், கோவை மாவட்ட நிர்வாகம் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுப் சான்றிதழ்களை வழங்கினார்.



சென்னை: பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயல்பட்ட கோவை மாவட்ட ஆட்சியருக்கு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது 2022 வழங்கி முதல்வர் கௌரவித்தார்.



சென்னை தலைமை செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு (கோவை, கரூர், தஞ்சாவூர்) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.



அதன்படி, 2022-ஆம் ஆண்டிற்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகளில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்த பெரும் முயற்சிகள் மேற்கொண்டு, தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, சிறப்பாக செயலாற்றிய கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரனுக்கு முதல் இடத்திற்கான தங்கப்பதக்கத்தையும் சான்றிதழையும் தமிழக முதல்வர் வழங்கினார்.



இரண்டாம் இடத்தினை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் மூன்றாம் இடத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் பெற்றனர்.

இந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், துறை தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உட்பட

அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...