கோவையில் மது போதையில் அரசு பேருந்து ஜன்னல் கண்ணாடி உடைப்பு: தொழிலாளி கைது…!

பொள்ளாச்சி – கோட்டூர் இடையே மது போதையில் தகராறில் ஈடுபட்டு பேருந்து கண்ணாடியை உடைத்த அதே பகுதியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் மது போதையில் அரசு பேருந்து ஜன்னல் கண்ணாடி உடைப்பு தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை பொள்ளாச்சி – கோட்டூர் இடையே இயக்கப்பட்டு வரும் (எண் -17) அரசு பேருந்து நேற்று வழக்கம் போல கோட்டூர் சென்று விட்டு மீண்டும் பொள்ளாச்சி நோக்கி கிளம்பியது. அப்போது பேருந்து கோட்டூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள மாகாளியம்மன் கோவில் அருகே வந்தபோது சாலையின் நடுவே இரு சக்கர வாகனத்தை நிறுத்தியவாறு நின்று கொண்டு இருந்ததாகத் தெரிகிறது.

அப்போது அரசு பேருந்து ஓட்டி வந்த அங்காலங்குறிச்சியை சேர்ந்த ஜெகநாதன் (52), சாலையின் ஓரமாக நிற்குமாறு மது போதையில் இருந்த நபரை அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அவர் விலகிச் செல்லாமல், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தோடு, சாலையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து ஓட்டுநர் ஜெகநாதன் கோட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு பேருந்து கண்ணாடியை உடைத்த அதே பகுதியை சேர்ந்த பஞ்சலிங்கம் (39) என்பவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...