'ரன்வே' பராமரிப்பு பணிக்காக கோவை - ஷார்ஜா விமான நேரம் நாளை முதல் மாற்றம்!

கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஓடுதளம் (ரன்வே) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் கோவை - ஷார்ஜா விமான நேரம் நாளை முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் விமான ஓடுதளம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதிகாலை தரை இறங்கும் 'ஏர் அரேபியா' விமானத்தின் நேரம் நாளை முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறியதாவது: விமான நிலையங்களில் ரன்வே பராமரிப்பு பணி பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுவது வழக்கம். கோவை சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் இந்தப் பணிகள் துவங்கப்பட்டன. இதன் காரணமாக இரவு 10:00 மணிக்குள் அனைத்து விமான சேவைகளும் நிறைவு பெறும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கோவை - ஷார்ஜா இடையே இயக்கப்படும் 'ஏர் அரேபியா' விமானம் அதிகாலை 3:30 மணிக்கு தரையிறங்கி மீண்டும் 4:15 மணியளவில் புறப்பட்டு செல்வது வழக்கம்.

ஓடுதள பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் (ஜூன் 16) 'ஏர் அரேபியா' விமானம் இயக்கப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வாரத்தில் தற்போது ஐந்து நாட்கள் கோவை ஷார்ஜா இடையே விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. நாளை முதல் காலை 6:30 மணிக்கு விமானம் தரையிறங்கி மீண்டும் காலை 7:20 மணி அளவில் ஷார்ஜா புறப்பட்டுச் செல்லும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை 'ஏர் அரேபியா' ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...