பில்லூர்‌-।।। கூட்டுக்குடிநீர்‌ திட்டம்: அமைச்சா்‌ கே.என்‌.நேரு‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு..!

பில்லூர்‌-।।। குடிநீர் திட்டம்‌ ரூ.779 கோடி மதிப்பில்‌ மேட்டுப்பாளையம்‌, நெல்லித்துறை ஊராட்சி, முருகையன்‌ பரிசல்துறை, மருதூர்‌ ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம்‌ மற்றும்‌ கட்டன்மலை ஆகிய இடங்களில்‌ நடைபெற்றுவரும்‌ பணிகளை அமைச்சா் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை: பில்லூர்‌-।।। கூட்டுக்குடிநீர்‌ திட்டத்தை அமைச்சா்‌ கே.என்‌.நேரு‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ விரிவுபடுத்தப்பட்டுள்ள மற்றும்‌ புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பவானி ஆற்றின்‌ நீர்‌ ஆதாரமாகக் கொண்ட குடிநீர்‌ பில்லூர்‌-।।। திட்டம்‌ ரூ.779 கோடி மதிப்பில்‌ மேட்டுப்பாளையம்‌, நெல்லித்துறை ஊராட்சி, முருகையன்‌ பரிசல்துறை, மருதூர்‌ ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம்‌ மற்றும்‌ கட்டன்மலை ஆகிய இடங்களில்‌ நடைபெற்றுவரும்‌ கட்டுமான பணிகள்‌ மற்றும்‌ ரூ.49-கோடி மதிப்பீட்டில்‌ சங்கனூர்‌ பள்ளம்‌ புனரமைக்கும்‌ பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சா்‌ கே.என்‌.நேரு‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளைத் தரமானதாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்குக் கொண்டுவர உத்தரவிட்டார்‌.

மாநகராட்சியில்‌ விரிவுபடுத்தப்பட்டுள்ள மற்றும்‌ புதிதாக சோக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குப் பவானி ஆற்றின்‌ நீர் ஆதாரமாகக் கொண்ட குடிநீர்‌ பில்லூர்‌-।।। திட்டம்‌ ரூ.779 கோடி மதிப்பில்‌ மேட்டுப்பாளையம்‌, நெல்லித்துறை ஊராட்சி, முரகையன்‌ பரிசல்துறை, மருதூர்‌ ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம்‌ மற்றும்‌ கட்டன்மலை ஆகிய இடங்களில்‌ நடைபெற்றுவரும்‌ கட்டுமான பணிகளையும்‌, ரூ.49 கோடி மதிப்பீட்டில்‌ சங்கனூர்‌ பள்ளம்‌ புனரமைக்கும்‌ பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு‌ இன்று (15.06.2022) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, செய்தியாளரிடம்‌ தெரிவித்ததாவது,

“ தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஆணைப்படி, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ உள்ள கோவை மாநகராட்சி, நகராட்சிகள்‌, பேரூராட்சிகள்‌ மற்றும்‌ தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரியம்‌ மூலமாக நடைபெற்றுவரும்‌ வளாச்சித்‌ திட்டப்பணிகளை விரைவுபடுத்துவதற்குத் தேவையான ஆலோசணைகளும்‌, அறிவுரைகளும்‌ வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும்‌ பில்லூர்‌ அணையிலிருந்து குடிநீர் வழங்க பில்லூர்‌-।।। திட்டம்‌ 2035ம்‌ ஆண்டு கோயம்புத்தூர்‌ மாநகராட்சியிலுள்ள மக்கள்‌ தொகையை கருத்தில்‌ கொண்டு திட்டம்‌ தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம்‌ ரூ.779 கோடி மதிப்பில்‌ மேட்டுப்பாளையம்‌, நெல்லித்துறை ஊராட்சி, முருகையன்‌ பரிசல்துறை, மருதூர்‌ ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம்‌ மற்றும்‌ கட்டன்மலை ஆகிய இடங்களில்‌ கட்டுமான பணிகள்‌ மற்றும்‌ குடிநீர் குழாய்‌ பதித்தல்‌ போன்ற பணிகள்‌ நடைபெற்றுவருகிறது.

இப்பணிகளில்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, விரைவாக செய்து முடிக்க அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம்‌ நெல்லித்துறை ஊராட்சி, முருகையன்‌ பரிசல்துறை பகுதியில்‌ ரூ.134 கோடி மதிப்பிட்டில்‌ தலைமை நீரேற்று நிலையம்‌ கட்டுமானப்‌ பணி தற்போது நடைபெற்று வருகிறது. மீதமுள்ள பணிகளை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அதனைத்‌ தொடர்ந்து, முருகையன்‌ பரிசல்துறை பகுதியிலிருந்து சுமார்‌ 16 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மருதூர்‌ பகுதிக்கு குடிநீர் பம்பிங்‌ செய்து கொண்டுவரப்படுகிறது. மருதூர்‌ ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம்‌ பகுதியில்‌ பில்லூர்‌ அபிவிருத்தி திட்டம்‌ -।।।, ரூ.104.900 கோடி மதிப்பீட்டில்‌ 178 MLD குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலைய வடிவமைப்பு மற்றும்‌ கட்டுமானப்பணிகளில்‌ தற்போது 60 சதவீத பணிகள்‌ நிறைவுபெற்றுள்ளது.



மீதமுள்ள பணிகள்‌ விரைவில்‌ முடிக்க அறிவுறுத்தப்பட்டு, கட்டுமானப்பணிகளின்‌ தரமும்‌ ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, தண்டிப்பெருமாள்புரம்‌ பகுதியிலிருந்து சுமார்‌ 16 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கட்டன்‌ மலைக்கு தண்ணீர்‌ கொண்டுவரப்படுகிறது.

அதன்பின்னர்‌, கட்டன்மலை பகுதியில்‌ ரூ.62.00 கோடி மதிப்பில்‌ 900 மீட்டா்‌ தொலைவிற்கு சுரங்கம்‌ அமைக்கும்‌ பணிகள்‌ முழுமையாக நிறைவுபெற்றுள்ளது. இவ்விடத்திலிருந்து பன்னிமலை பகுதியில்‌ 146 இலட்சம்‌ கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கம்‌ பகுதிக்கு குடிநீர் கொண்டுவரப்பட்டு மாநகராட்சி பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்ச்‌ 2023-க்குள்‌ பில்லூர்‌ குடிநீர்‌ திட்டம்‌ பணிகளை நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சா்‌ கே.என்‌.நநேரு அவர்கள்‌ தெரிவித்தார்‌.



இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா‌, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய மேலாண்மை இயக்குநா்‌ வி.தட்சிணாமூர்த்தி‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌‌, மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌  துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினர்கள்‌ நா.கார்த்திக்‌, திரு.ட்டி.இராமச்சந்தின்‌, துணை  ஆணையாளா்‌ மோ.ஷாமிளா, மாநகரப்‌ பொறியாளர்‌ (பொ) எஸ்‌.அரசு, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய செயற்பொறியாளா்‌ செல்லமுத்து, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்குமார்‌, உதவி பொறியாளர்‌ சாம்ராஜ்‌, சிவஜோதி, பொறி.நித்திலா, மாநகராட்சி உதவி பொறியாளர்‌ பாலச்சந்தார மற்றும்‌ மாநகராட்சி அலுவலா்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...