திருப்பூரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தேதி மூன்று முறை ஒத்திவைப்பு: கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம்..!

கடந்த 10-ஆண்டுகளாக திருப்பூர் மாவட்ட தலைவராக இருந்து வரும் கோபி, தற்போது பதவி பறிபோய்விடுமோ என்ற தோல்வி பயத்தால் தேர்தலைத் தவிர்த்து வருவதாகக் கூறி, அவருக்கு எதிராக கட்சியினர் 70-க்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தேதி மூன்று முறை ஒத்திவைப்பு கட்சியினர் கட்சி அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி அமைப்புத் தேர்தல் நடத்துவது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே

திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட, மாநகர, மற்றும் வட்டார பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 300-பேர் இப்பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.

இதனிடையே, தேர்தல் தேதியானது கடந்த 9-தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மாவட்ட தலைவராக உள்ள கோபி வெளியூர் செல்வதாக சாக்குப் போக்குச் சொல்லி விட்டு தேர்தல் தேதி தள்ளிப் போடப்பட்டதாகவும், அதையடுத்து 12-ஆம் தேதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அப்போதும் தன்னால் வர முடியாது என்று இழுத்தடித்து வந்த நிலையில், இறுதியாக 15-ஆம் தேதி இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.



இதையடுத்து கட்சியினர் ஏராளமானோர் இன்று கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்த நிலையில், திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின், மாவட்ட தலைவர் கோபி வராமல் கூட்டத்தைத் தவிர்த்ததாகவும், இதனிடையே, கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்ட தலைவராக இருந்து வரும் கோபி, தற்போது பதவி பறிபோய்விடுமோ என்ற தோல்வி பயத்தால் தேர்தலைத் தவிர்த்து வருவதாகக் கூறி, அவருக்கு எதிராக கட்சியினர் 70-க்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே கோவை மாவட்ட தலைவரும், திருப்பூர் வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் மனோகரிடம் கட்சியினர் புகார் தெரிவித்த நிலையில், தேர்தல் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...