மன அழுத்தத்தை குறைக்க கைதிகளுக்கு சிறப்பு யோகா வகுப்பு கோவை ஈஷா சார்பில் 26-சிறைகளில் நடத்தப்பட்டது..!

இதில், யோக நமஸ்காரம், நாடி சுத்தி போன்ற எளிமையான, அதேசமயம் சக்தி வாய்ந்த யோகப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இப்பயிற்சிகளை சிறை கைதிகள் தினமும் செய்து வருவதன் மூலம் மன அழுத்தப் பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.


கோவை: குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாடும் சிறை கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்க ஈஷா சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.

அதன்படி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை, வேலூர், கடலூர், சேலம், விழுப்புரம், நாகர்கோவில் என பல்வேறு இடங்களில் உள்ள ஆண்களுக்கான மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகள் என 26 சிறைகளில் இவ்வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் மற்றும் சிறை வார்டன்கள் பங்கேற்று பயன் பெற்றனர். சத்குருவால் பயிற்சி அளிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் சிறைகளுக்கு நேரில் சென்று ‘உயிர் நோக்கம்’ என்ற 3 நாள் யோகா வகுப்பை நடத்தினர்.



இதில் யோக நமஸ்காரம், நாடி சுத்தி போன்ற எளிமையான, அதேசமயம் சக்தி வாய்ந்த யோகப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இப்பயிற்சிகளை சிறை கைதிகள் தினமும் செய்து வருவதன் மூலம் மன அழுத்தப் பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.

மேலும், முதுகுத்தண்டு வலுப்பெறும், மூட்டு வலியில் இருந்து விடுதலை பெறலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். இவ்வகுப்புகள் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குனர் சுனில் குமார் சிங் ஐ.பி.எஸ் ஒத்துழைப்புடன் மே 30-ம் தேதி முதல் ஜூன் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சிறை கைதிகளுக்கு இதுபோன்ற இலவச யோகா வகுப்புகளை கடந்த 30 வருடங்களாக ஈஷா நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...