கோவை பொள்ளாச்சி அருகே பள்ளி செல்ல பேருந்து வசதி இல்லாமல் தவித்த மலை கிராமத்திற்கு பேட்டரி வாகனம் வனத்துறை மூலம் வழங்கல்..!

தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுகிய வனத்துறை அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் 14-பேர் செல்லும் அளவிற்கு 2.80-லட்சம் மதிப்பிலான ஒரு பேட்டரி வாகனத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்காக இன்று வழங்கினர்.


கோவை: பொள்ளாச்சி அருகே பள்ளி செல்ல பேருந்து வசதி இல்லாமல் தவித்த மலை கிராமத்திற்கு பேட்டரி வாகனம் வனத்துறை மூலம் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி உள்ளது. பழைய சர்கார்பதி மலை கிராமம். தொடக்கப்பள்ளி மட்டுமே இங்கு உள்ள நிலையில் உயர்கல்வி பயில மாணவர்கள் 6 கிலோ மீட்டர்கள் நடந்து பயணிக்கும் நிலை இருந்தது.

இதனால், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிட்ட நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுகிய வனத்துறை அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் 14-பேர் செல்லும் அளவிற்கு 2.80-லட்சம் மதிப்பிலான ஒரு பேட்டரி வாகனத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்காக இன்று வழங்கினர்.



இதையடுத்து, மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர்கள் இனிப்புகள் வழங்கி வாகனத்தில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி வைத்து மகிழ்ந்தனர். இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், முதல் கட்டமாக பழைய சர்கார்பதி மலைக்கிராமத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் இந்த வசதியை ஏற்படுத்தி உள்ளதாகவும்.

மேலும், பல தன்னார்வ அமைப்புகளை அணுகி அடுத்த கட்டமாக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கூமாட்டி, சின்னார்பதி, கோழிகமுத்தி, எருமை பாறை, ஆகிய மலைகிராம மாணவர்கள் பள்ளி செல்ல இது போன்ற பேட்டரி வாகனம் ஏற்பாடு செய்து தர உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...