கோவை எல்லன் மருத்துவமனை இயக்குனர் உட்பட 5-பேரை சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி..!

கோவை எல்லன் மருத்துவமனை விவகாரத்தில் கைதான மருத்துவர் உட்பட 5 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



கோவை எல்லன் மருத்துவமனை விவகாரத்தில் கைதான மருத்துவர் ராமச்சந்திரன் உட்பட 5 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து  விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோவை காந்திபுரம் எல்லன்  மருத்துவமனையின் உரிமையாளர் ராமச்சந்திரன், திருச்செந்தூரைச் சேர்ந்த மருத்துவர் உமா சங்கருக்கு மருத்துவமனையை வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து இருந்தார். சென்னையில் ஏற்கனவே மருத்துவமனை நடத்தி வந்த Dr. உமா சங்கர், கோவையில் ஒப்பந்த அடிப்படையில் எடுத்த மருத்துவமனையைச் சென்னை மருத்துவமனை என்ற பெயரில் நடத்தி வந்தார். 

இந்த நிலையில், உமாசங்கர் வாடகை தொகையைச் செலுத்தாமல், மருத்துவமனையை வேறு ஒருவருக்கு உள்வாடகைக்கு விட முயன்று தனக்குக் கோடி கணக்கில் நஷ்டம் ஏற்படுத்துவதாக ராமச்சந்திரன் கோவை கிரைம் பிராஞ்ச் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மருத்துவர் உமா ஷங்கரை போலீசார் கைது செய்தனர். பின், பிணையில் வெளிவந்து, காவல் நிலையத்தில் தினமும் அவர் கையெழுத்திட்டு வந்தார்.

இதனிடையே, மருத்துவர் உமாசங்கர்  ஜனவரி 2021 ஆம் ஆண்டு நடைப்பயிற்சி சென்ற போது அவர் மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

கோவை மருத்துவர் உமாசங்கர் விபத்தில் மரணமடைந்தது குறித்து உடனடியாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்திட வேண்டும் என்று அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,எம்.பி, கோரிக்கை விடுத்தார். 

கடந்த ஆண்டு  இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி காவல் துறையினர், ரத்தினபுரி காவல் நிலையத்தில் டாக்டர் ராமச்சந்திரன் அளித்தது பொய் புகார் என்பதும்  மருத்துவமனையைக் கைப்பற்ற டிசம்பர் 2020 ஆம் ஆண்டு மருத்துவர் ராமச்சந்திரன் ஆட்களை வைத்து மருத்துவமனையை தாக்கியதும் நோயாளிகளை வெளியேற்றியது அம்பலமானது. பின்னர், Dr. உமா சங்கர் மீது பொய் புகார் அளித்ததும், அதன்  பேரில் அவர் மீது இரத்தினபுரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு  செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.  

இதனையடுத்து, பொய்யான தகவல் கொடுத்த எல்லன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராமசந்திரன் மற்றும் மருத்துவர் காமராஜ் மற்றும் மூர்த்தி, முருகேசன், பழனிச்சாமி ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.



இந்நிலையில் அவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தாக்கல் செய்த மனு இன்று தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டாக்டர் ராமசந்திரன் உட்பட 5 பேரும் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 



5 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் ஐந்து நாட்கள் மட்டும் நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் அனுமதி அளித்தார். தினமும் மாலை அரைமணிநேரம் வழக்கறிஞர்கள் சந்தித்துக் கொள்ளவும் அனுமதி அளித்தார்.



5 பேரையும்  7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி  கேட்டு சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில், ஐந்து நாட்கள் மட்டும் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் அனுமதி அளித்தார். தினமும் மாலை அரைமணி நேரம் அவர்கள் வழக்கறிஞர்கள் சந்தித்து கொள்ளவும் அனுமதி அளித்தார்.

மேலும் ஐந்து பேருக்கும் உரிய மருத்துவ வசதிகளை வழங்கவும் நீதிபதி சஞ்சீவி பாஸ்கர்  உத்தரவிட்டார். இதனிடையே, 5 பேரும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற்ற நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...