கோவை தீத்திபாளையம் பகுதியில் புகுந்த ஒற்றை காட்டு யானை வனத்துறை ஊழியரை தாக்கும் பதபதைக்க வைக்கும் வீடியோ..!

தீத்திபாளையம் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு பணியில் இருந்த வனத்துறை ஊழியரை தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.



கோவை: கோவை பேரூர் தீத்திபாளையம் பகுதியில் ஒற்றை காட்டு யானை வனத்துறை ஊழியரை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



வன ஊழியரை தாக்கிய போது, அருகிலிருந்த வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து, கூச்சலிட்டதால் அவரை விட்டுவிட்டு யானை அங்கிருந்து சென்றது. பின்னர் அவரை மீட்ட வனத்துறையினர், காயமடைந்த வன ஊழியரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், யானையிடம் சிக்கிய வன ஊழியர் மதுக்கரை வனச்சரகத்தில் பணிபுரியும் வேட்டை தடுப்பு வீரர் நாகராஜ் என்பது தெரியவந்துள்ளது.



தற்போது வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளில், அந்த ஒற்றை யானை ஆக்ரோஷமாக ஓடி வருவதும், அந்த யானையைப் பொதுமக்கள் மொட்டை மாடியில் நின்றபடி அச்சத்தில் பார்த்து கூச்சலிடுவதும் பதிவாகியுள்ளது.



யாரும் எதிர்பாராத நேரத்தில், யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வேட்டை தடுப்பு வீரர் நாகராஜை துதிக்கையால் தூக்கி வீசி அவரை தாக்கும் பதைபதைக்கும் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மீண்டும் அந்த யானை ஊருக்குள் வந்து விடுமோ என்ற பயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கும் பேரூர் தீத்திபாளையம் பகுதி மக்கள், வனத்துறையினர் அங்கு முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...