கோவை விமான நிலையத்தில் தினசரி இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு: தொழில் துறையினர் வரவேற்பு

கோவை விமான நிலையம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தினமும் இயக்கப்படும் எண்ணிக்கை இன்று, ஜூன் 14 (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி, உள்நாடு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரிவு என இரண்டையும் சேர்த்து 28 ஆக அதிகரித்துள்ளது.


கோவை: இரண்டு ஆண்டுகளுக்கு பின் கோவை விமான நிலையத்தில், தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது, தொழில் துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உட்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று பரவலுக்கு முன்பு தினமும் 33 முதல் 36 விமானங்கள் இயக்கப்பட்டன. ஆண்டுதோறும் 30 லட்சம் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வந்தனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின், பயணிகள் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பிட்டு, சொல்ல வேண்டுமென்றால் சில நாட்கள் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.

நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி திட்டம்,நோய் தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் என மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சியின் காரணமாக நாடு முழுவதும் விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சேவை அதிகரித்து வருகிறது.

அதன்படி, கோவை விமான நிலையத்தில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. தினமும் இயக்கப்படும் எண்ணிக்கை இன்று, ஜூன் 14 (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி, உள்நாடு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரிவு என இரண்டையும் சேர்த்து 28 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து கொங்கு குளோபல் போரம்(KGF), இயக்குனர், டி.நந்தகுமார் கூறியதாவது:



கொரோனா நோய் தொற்று பரவலால் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் விமான போக்குவரத்தில் மிகப்பெரிய தாகத்தை ஏற்படுத்தியது. தற்போது, கோவை உட்பட அனைத்து விமான நிலையங்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதற்கு முக்கிய காரணம், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் தான். சுற்றுலா, தொழில், கல்வி, ஆன்மீக பயணம் என பல்வேறு காரணங்களுக்காக, கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல, மேற்குறிப்பிட்ட அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் காணப்படுகிறது.

இது, கோவை உட்பட ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்தின் கீழ் உள்ள அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சியிலும் மிக பெரிய அளவில் பங்களிக்கும்", இவ்வாறு அவர் கூறினார்.

கோவையில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர், டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், பூனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...