பொள்ளாச்சி அருகே 5 வயது குழந்தையுடன் காணாமல் போன மனைவி: கணவன் புகார்!

பொள்ளாச்சி அருகே தனது 5 வயது குழந்தையுடன் மனைவியை காணவில்லை என்று கணவன் புகார் அளித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அருகே தனது 5 வயது குழந்தையுடன் மனைவியை காணவில்லை என்று கணவன் புகார் அளித்துள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அபிமன்யு (29), கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 5 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அபிமன்யுவின் மனைவி 5 வயது குழந்தையை எடுத்துக்கொண்டு காய்கறி வாங்கி வருவதாக கூறிச் சென்றதாக தெரிகிறது. நீண்ட நேரமாகியும், மனைவி வீடு திரும்பாததால், அவரது உறவினர் வீட்டில் தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அபிமன்யு பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காணாமல் போன பெண் மற்றும் 5 வயது குழந்தையை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...