பொள்ளாச்சி அருகே கண் பார்வையற்ற தம்பதியினருக்கு நிலத்தை தானமாக வழங்கிய தம்பதியினர்!

பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளி செட்டிபாளையத்தை சேர்ந்த கண் பார்வையற்ற தம்பதியருக்கு சுந்தர அங்காளம்மன் டிரஸ்ட் சேர்ந்த தம்பதியினர் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 3.25 செண்ட் நிலத்தை முறைப்படி கிரைய பத்திரம் எழுதி, ஆவணங்களை கொடுத்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளி செட்டிபாளையத்தை சேர்ந்த கண் பார்வையற்ற தம்பதியருக்கு சுந்தர அங்காளம்மன் டிரஸ்ட் சேர்ந்த தம்பதியினர் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 3.25 செண்ட் நிலத்தை முறைப்படி கிரைய பத்திரம் எழுதி, ஆவணங்களை கொடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளி செட்டிபாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி ராணி. இருவரும் பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர்கள். இவர்களுக்கு யுகபாரதி என்ற 5 வயது மகன் உள்ளார். இவர்கள் ஊதுபத்தி வியாபாரம் செய்து வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர்.



கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்த சுந்தர அங்காளம்மன் டிரஸ்ட் நடத்திவரும் தங்கவேல், சுந்தரவள்ளி தம்பதியினர், கண் பார்வையற்ற தம்பதியினரை சந்தித்துள்ளனர். அவர்களின் நிலையறிந்து அவ்வப்போது அவர்களுக்கு சிறு சிறு உதவிகளை செய்து வந்துள்ளனர்.

கண் பார்வையற்ற தம்பதியினரின் மகன் யுகபாரதி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பொள்ளாச்சி அருகே உள்ள சூலக்கல் தேவராயபுரம் அன்பு நகர் பகுதியில் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 3.25 செண்ட் நிலத்தை தானமாக வழங்க முடிவு செய்து, இன்று பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி கிரைய பத்திரம் எழுதி அவர்களிடம் ஆவணங்களை வழங்கினர்.

தங்களை, சந்தித்தது முதல் இன்று வரை பல உதவிகளை செய்துள்ளார்கள். தற்போது, எங்களுக்கு தானமாக 3.25 சென்ட் நிலத்தையும் வழங்கி, வீடு கட்டித் தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர் என்றும், அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பார்வையற்ற தம்பதியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...