பொள்ளாச்சி அருகே குடிபோதையில் லாரியை திருடிச் சென்ற ஆசாமி: ஜி.பி.எஸ் கருவி மூலம் சிக்கினார்!

குடி போதையில் லாரியை திருடிச் சென்ற போதை ஆசாமியை ஜிபிஎஸ் கருவி மூலம் போலீசார் கண்டுபிடித்து கடத்தி சென்ற லாரியை மீட்டதுடன் போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.


கோவை: குடி போதையில் லாரியை திருடிச் சென்ற போதை ஆசாமியை ஜிபிஎஸ் கருவி மூலம் போலீசார் கண்டுபிடித்து கடத்தி சென்ற லாரியை மீட்டதுடன் போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் மது. பேப்பர் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான லாரியில் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த தங்கமுத்து என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை பணியை முடித்துவிட்டு, வீட்டின் அருகே லாரியை நிறுத்தியுள்ளார். பின் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது லாரி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் லாரி உரிமையாளர் மதுவுக்கு கொடுத்த தகவலின் பேரில், மது ஆனைமலை போலீசாருக்கு புகார் அளித்தார்.

இதையடுத்து, லாரியில் பொருத்தியிருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் போலீசார் ஆய்வு செய்ததில் லாரி குமரலிங்கம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று ஆனைமலை போலீசார் மற்றும் குமரலிங்கம் போலீசார் இணைந்து லாரியை மடக்கிப் பிடித்தனர். பின்னர், லாரியில் இருந்த திவான்சாபுதூர் பகுதியை சேர்ந்த பஞ்சலிங்கம்(33) என்பவரிடம், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குடிபோதையில் லாரியை திருடிச் சென்றதாக தெரிவித்துள்ளார். லாரியை திருடிச் சென்ற பஞ்ச லிங்கத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் கடத்திச் செல்லப்பட்ட லாரியை மீட்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...