80-லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, மேற்கொண்ட விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து பல்லடம் அருகே விற்பனை செய்வதற்காக கொண்டு வந்து பதுக்கி வைத்தது தெரியவந்தது.
திருப்பூர்: பல்லடம் அருகே விற்பனைக்காக கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டு 80 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்ட அவினாசிபாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சின்னாரிபட்டி பகுதியில் உள்ள மைதானம் அருகே சோதனை மேற்கொண்டபோது பிளாஸ்டிக் கேனில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கலியமூர்த்தி(26), திருமூர்த்தி(19) ஆகியோரை கைது செய்து 80 லிட்டர் கள்ளச்சாரயத்தையும் அவினாசிபாளையம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து இங்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்து பதுக்கி வைத்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.