என்டிசி ஆலைகளை இயக்கிட வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் கோவையில் உண்ணாவிரத போராட்டம்..!

இதில் LPF, HMS, ATP, CITU, INTUC, AITUC, MLF, Dr Ambetkar, NDLF ஆகிய ஒன்பது தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.



கோவை: என்டிசி ஆலைகளை இயக்கிட வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

என்டிசி ஆலைகளை முழுமையாக இயக்கிட கோரியும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் பல மாதங்களாக பல்வேறு தொழிற்சங்க அமைப்பினர் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசிடமும் பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டது.



எனினும் என்டிசி ஆலைகள் முழுமையாக இயக்கப்படாத நிலையில் SAVE NTC என்ற பெயரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று 9 மாநிலங்களில் போராட்டம் நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்ட நிலையில் அதன் ஒரு பகுதியாக கோவையில் 9 தொழிற்சங்கங்கள் இணைந்து பெருந்திரள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



கோவை சிவானந்தா காலனி பகுதியில் காலை முதல் மாலை வரைஉண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் LPF, HMS, ATP, CITU, INTUC, AITUC, MLF, Dr Ambetkar, NDLF ஆகிய ஒன்பது தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனைக் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார்.

இனிமேலும் என்டிசி ஆலைகளை முழுமையாக இயக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.



Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...