கோவை ரயில் நிலையம் நுழைவாயில் முன்பு விரைவு ரயில்களை தனியாருக்கு அளிப்பதை கண்டித்து சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கருப்பு தின ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து கோவையில் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை முதல் சீரடி வரை துவக்கப்பட்டுள்ள ரயிலை தனியாருக்கு அளித்ததைத் திரும்பப் பெற வேண்டும், டெல்லி நேப்பாள் ரயிலை ஐஆர்சிடிசிக்கு விற்றதை வாபஸ் பெற வேண்டும், பாரத் கௌரவ் என்ற பெயரில் 100 விரைவு ரயில்களை தனியாருக்கு அளிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த யூனியனை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய அரசிடமும் ரயில்வே அமைச்சகத்திடம் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.