நான் தவறான தகவல்களை கூறுகிறேன் என்றால், அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடரட்டும் - கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

தமிழக அரசு குறித்து நான் கூறும் தகவல்கள் பொய் என்றால் அமைச்சர் செந்தில் பாலாஜி என் மீது வழக்கு தொடரட்டும். அதனை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார். திமுக அமைச்சர்கள் பேசுவது அடுப்புக்கரி சட்டியை பார்த்து, நீ கருப்பாக உள்ளாய் என்று சொல்வது போல் உள்ளது என்று விமர்சித்தார்.



கோவை: கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், "நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரத்தில் டெல்லி அமலாக்கத்துறை சட்டத்திற்கு உட்பட்டு ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்துள்ளனர் என்றும் இதற்காக டெல்லி ஸ்தம்பிக்கும் அளவிற்கு காங்கிரஸ் கட்சியினர் அங்கு கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு 83 சதவிகிதம் பங்கு இருப்பதால் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், எதற்காக ராகுல் காந்தி, சோனியா காந்தி தவறு செய்யாதவர்கள் போல் நடிக்க வேண்டும். இதற்காகத் தான் காங்கிரஸ் நாடகம் ஆடுவதாகவும் மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறோம் .

தமிழக அரசு குறித்து நான் கூறும் தகவல்கள் பொய் என்றால் அமைச்சர் செந்தில் பாலாஜி என் மீது வழக்கு தொடரட்டும். அதனை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார். திமுக அமைச்சர்கள் பேசுவது அடுப்புக்கரி சட்டியை பார்த்து, நீ கருப்பாக உள்ளாய் என்று சொல்வது போல் உள்ளது" என்று விமர்சித்தார்.

மேலும், மாதம், மாதம் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும். திமுகவினர் அனைவருக்கும் தெரியும்படி ஊழல்கள் செய்கின்றனர் ஊழலை தடுப்பதற்கு அதிகாரிகளை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை. முதல்வர் தான் ஊழல் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், எனவும் கேட்டுக் கொண்டார்.

நியூட்ரிசன் கிட் டெண்டர் இதுவரை திறக்கப்படவில்லை என கூறிய அண்ணாமலை, இது குறித்து சமீப காலங்களாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏன் செய்தியாளர்களை சந்திக்க வில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் காவல் நிலையத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தமிழக முதல்வர் தான் விளக்கம் அளிக்க வேண்டுமே தவிர டிஜிபி உள்ளிட்ட காவல்துறையினர் விளக்கமளிப்பது போதாது, என்றார்.

திமுக அரசு எதிர்க்கட்சியாக இருந்த போது, சாத்தான்குளம் விவகாரத்தை அரசியல் நிகழ்வாக மாற்றியதாக தெரிவித்த அவர், தற்பொழுது காவல்துறை செயலின்மை என்பது அதிகரித்துள்ளது. மேலும், தமிழக முதல்வர் காவல் நிலையங்களில் ஆய்வு செய்ய ஆரம்பித்த பிறகுதான் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல் தமிழக காவல்துறை இருப்பதாக, சாடினார்.

தமிழகத்தில் கஞ்சா உட்பட போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கஞ்சா விற்பனையாளர்களின் வருவாய் அதிகரித்துள்ளது என டுவீட் செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் போடும் காவல்துறையினர், ஏன் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது குண்டாஸ் போடுவதில்லை? என்று கேள்வி எழுப்பினார்.



மேகதாது அணை விவகாரத்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே, பாஜக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அணை கட்ட வேண்டும் என யார் வந்தாலும், தமிழக அரசு அதனை எதிர்க்க வேண்டும். அந்த முடிவிற்கு பாஜக துணை நிற்கும். மேலும், இதனை அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக வெளிப்படுத்தி உள்ளதாக தெரிவித்த அவர், மேகதாதுவில் மூன்று மாநிலங்களில் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது, எனவும் தெரிவித்தார்.

அதிமுகவுடன் போட்டி போடும் மனப்பான்மை தங்களுக்கு இல்லை எனக் கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவை வளர்க்கவே நாங்கள் பாடுபட்டு வருவதாக தெரிவித்தார். 

சசிகலாவை கட்சியில் இணைப்பது குறுத்து பலரும் கருத்து தெரிவிப்பது அவரவர் தனிப்பட்ட கருத்து எனவும் அவரை கட்சியில் இணைப்பது குறித்து அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், சசிகலா கட்சியில் இணைவது குறித்து அதிமுக மனது புண்படும் வகையில் பாஜகவின் செயல்பாடு இருக்காது, எனவும் தெரிவித்தார்.

அனைத்து விவகாரங்களிலும் பாஜகவின் கருத்து வித்தியாசமாகத் தான் உள்ளது எனக் கூறிய அவர் திமுக தான் தங்களை செயல்பட வைப்பதாகவும் தெரிவித்தார். அதிமுகவில் இருக்கும் ஒவ்வொருவரும் அவர்களது கட்சி முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று எவ்வாறு நினைக்கிறார்களோ, அதே போல்தான் பாஜகவில் இருக்கும் அனைவரும் எங்கள் கட்சி முதலிடத்தில் இருக்க வேண்டுமென நினைக்கிறோம். இதில் தவறில்லை, என்றார். 

தமிழகத்தில் ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. தற்பொழுது கம்யூனிஸ்ட் கட்சி எங்கே இருக்கிறது? என கேள்வி எழுப்பினார். மேலும், கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளார் என ஸ்வப்னா கூறி உள்ளார் எனவும் தெரிவித்தார். லூலூ மால் வந்தால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் சிறு குறு தொழில் செய்பவர்கள் எனவும் அப்படியிருக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் அதைப்பற்றி பேசுவதில்லை என கேள்வி எழுப்பினார். 

அமைச்சர் சேகர்பாபு அரசியல் லாபத்திற்காக சிதம்பரம் தீக்ஷிதர்கள் விவகாரத்தில் செயல்படுகிறார். அவர் நீதிமன்ற தீர்ப்பு இருக்கும்பொழுது கோவிலுக்குள் ஏன் சென்றார்கள் என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பட ரிலீஸ் நிகழ்வுகளில் தான் அதிகம் இருக்கிறாரே தவிர, கல்வித்துறை பக்கம் செல்வதில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எப்படி எல்லாம் செயல்படக் கூடாதோ, அப்படி எல்லாம் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செயல்படுவதாக, விமர்சித்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...