கோவை பேரூர் அருகே முகாமிட்ட ஒற்றை பெண் காட்டு யானையால் பரபரப்பு – வன ஊழியர், பசு மாடு காயம்….!

கோவை பேரூர் அடுத்த வேளாங்கன்னி நகர் அருகே முகாமிட்ட ஒற்றை காட்டு யானையை, சுமார் 6 மணி நேரம் போராடி வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.


கோவை: கோவை பேரூர் அடுத்த வேளாங்கன்னி நகர் அருகே முகாமிட்ட ஒற்றை காட்டு யானையை, சுமார் 6 மணி நேரம் போராடி வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

கோவை எட்டிமடை வனப்பகுதியில் இருந்து மலையை கடந்து வரும் காட்டு யானைகள், கரடிமடை வனப்பகுதிக்குள் வழக்கமாக சென்று வரும். ஆனால், கடந்த ஒரு வாரமாக அடிக்கடி நள்ளிரவு நேரங்களில் பேரூர் சுற்றுவட்டார பகுதி விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் பேரூர் தீத்திபாளையத்தில் உள்ள தமோதரன் என்பவராது விவசாய நிலத்திற்குள் 6 யானைகள் கொண்ட யானைக்கூட்டம், புகுந்தது. அப்போது அங்கிருந்த வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்திய யானைகள் அதிகாலையில் வனப்பகுதிக்குள் சென்றது.

5 யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், ஒரே ஒரு பெண் யானை மட்டும் வழி தவறி வனப்பகுதிக்கு அருகே உள்ள வேளாங்கன்னி நகர் குடியிருப்பு பகுதியிலேயே முகாமிட்டது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, மதுக்கரை வனச்சரக வனத்துறை ஊழியர்கள் யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் அனுப்பும் முயற்சியில் இறங்கினர்.



ஆனால், அந்த யானை எங்கும் செல்லாமல் குடியிருப்பில் உள்ள வீடுகளை சுற்றிச் சுற்றி வந்ததால், பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு மொட்டை மாடிகளின் மீது ஏறினர்.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையில், மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலர் மற்றும், மதுக்கரை, போளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட வன ஊழியர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் யானையை விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர்.

வழக்கமாக பட்டாசு வீசி ஒலியெழுப்பினால் வனப்பகுதிக்குள் சென்று விடும் யானை, இந்த முறை தொடர்ந்து குடியிருப்பை சுற்றி வந்தால் பரபரப்பு நிலவியது. அப்போது, அங்கிருந்த பசு மாட்டை தாக்கியது. இதனால், பசு மாடு காயமடைந்தது. பின்னர், அங்குள்ள பிற மாடுகளையும் யானை விரட்டியது.

அப்போது, யானையை விரட்டும் பணியில் ஈடுபட்ட மதுக்கரை வனச்சரக வேட்டை தடுப்பு காவலர் நாகராஜ் என்பவருக்கு யானை தாக்கியதில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, சோர்வடைந்த யானைக்கு வன ஊழியர்கள் மொட்டை மாடியில் இருந்தவாறு பழங்களை கொடுத்தனர்.



பழங்களை உண்ட யானை நீண்ட நேரத்திற்கு பின் குடியிருப்பு அருகே இருந்த ஓடை வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. இருப்பினும், யானை மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு மீண்டும் வருகிறதா? என்பதை கண்காணிக்க வனத்துறை ஊழியர்கள் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...