கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: ஆணையாளர் ஆய்வு..!

வார்டு எண்‌.74, செல்வம்பதி, முத்தண்ணன்‌ குளம்‌ ஏரியில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ ரூ.31.25 கோடி மதிப்பீட்டில்‌ குளத்தின்‌ புனரமைப்புப்பணிகள்‌ நடைபெற்றுவருவதை ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்றுவரும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.74, செல்வம்பதி, முத்தண்ணன்‌ குளம்‌ ஏரியில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ ரூ.31.25 கோடி மதிப்பீட்டில்‌ குளத்தின்‌ புனரமைப்புப்பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும்‌, துரிதமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.



பின்னர், மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செல்வசிந்தாமணி குளம்‌ சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ ரூ.31.47 கோடி மதிப்பீட்டில்‌ புனரமைப்புப்பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும்‌, துரிதமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்,‌ மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி குளம்‌ சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ ரூ.52.16 கோடி மதிப்பீட்டில்‌ புனரமைப்புப்பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும்‌, துரிதமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.



இதனிடையே,‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ கிருஷ்ணம்பதி ஏரி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ ரூ.19.36 கோடி மதிப்பீட்டில்‌ குளத்தின்‌ புனரமைப்புப்பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும்‌, துரிதமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.



உடன்‌ மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ சரவணன்‌, 74-வது மாமன்ற உறுப்பினர்‌ ஏ.எஸ்‌.சங்கர்‌, செயற்பொறியாளர்‌ (Jnnurm) பி.உமாதேவி, உதவி நிர்வாக பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளர்கள்‌ சத்யா, சவிதா மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...