தென்‌ கயிலாய பக்தி பேரவை சார்பில்‌ கோவை வெள்ளியங்கிரியில்‌ தூய்மைப்‌பணி: 350-க்கும்‌ மேற்பட்ட தன்னார்வலர்கள்‌ பங்கேற்பு..!

தென்‌ கயிலாய பக்தி பேரவை சார்பில்‌ கோவை வெள்ளியங்கிரி மலைப்‌ பாதையில்‌ மேற்கொள்ளப்பட்ட தூய்மைப்‌ பணியில்‌ 500-க்கும்‌ மேற்பட்ட சாக்கு பைகளில்‌ பிளாஸ்டிக்‌ குப்பைகள் சேகரிக்கப்பட்டது.


கோவை: தென்‌ கயிலாய பக்தி பேரவை சார்பில்‌ கோவை வெள்ளியங்கிரியில்‌ தூய்மைப்‌பணி மேற்கொள்ளப்படுகிறது.

கோவை பூண்டி பகுதியில்‌ அமைந்திருக்கும்‌ வெள்ளியங்கிரி மலை மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம்‌ வாய்ந்தது. சிவனே இந்த மலையில்‌ வந்து அமர்ந்து சென்றதன்‌ காரணமாக இது 'தென்‌ கயிலாயம்‌' எனவும்‌ அழைக்கப்படுகிறது. இதனால்‌, 7-வது மலையில்‌ சுயம்பு லிங்கமாகக் காட்சி தரும்‌ சிவனைத் தரிசிப்பதற்காக ஆண்டுதோறும்‌ கோடைக்காலத்தில்‌ லட்சக்கணக்கான மக்கள்‌ மலையேறுவது வழக்கம்‌.

அந்தச்‌ சமயத்தில்‌ அங்கு வீசியெறியப்படும்‌ பிளாஸ்டிக்‌ மற்றும்‌ பிற குப்பைகளால்‌ மலையின்‌ சுற்றுச்சூழலும்‌, புனிதத்‌ தன்மையும்‌ பாதிப்புக்குள்ளாவதைத் தவிர்க்க ஆண்டுதோறும்‌ தூய்மைப்‌ பணி மேற்கொள்ளப்படுகிறது.



அந்த வகையில்‌ தென்‌ கயிலாய பக்தி பேரவை சார்பில்‌ கடந்த மே 15, 22, 29 மற்றும்‌ ஜூன்‌ 5 ஆகிய தேதிகளில்‌ தூய்மைப்‌ பணி மேற்கொள்ளப்பட்டது. இதில்‌ சென்னை, ஐதராபாத்‌, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச்‌ சேர்ந்த 350-க்கும்‌ மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள்‌ மற்றும்‌ பக்தர்கள்‌ பங்கேற்றனர்‌.

உலக சுற்றுச்சூழல்‌ தினமான ஜூன்‌ 5-ம்‌ தேதி நடந்த நிகழ்ச்சியில்‌ அரசூரில் உள்ள கே.பி.ஆர்‌ பொறியியல்‌ கல்லூரியின்‌ மாணவர்களும்‌ பங்கேற்றனர்‌. அன்றைய தினம்‌ தூய்மைப்‌ பணியுடன்‌ சேர்த்து மண்‌ காப்போம்‌' இயக்கம்‌ சார்பில்‌ மண்‌ வளப்‌ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும்‌ ஏற்படுத்தப்பட்டது.

வெயில்‌, காற்று, மழை, குளிர்‌ என கடுமையான வானிலையையும்‌ பொருட்படுத்தாமல்‌ சேவையாற்றிய தன்னார்வலர்கள்‌ மொத்தம்‌ 500-க்கும்‌ மேற்பட்ட சாக்கு பைகளில்‌ பிளாஸ்டிக்‌ மற்றும்‌ இதர குப்பைகளைச்‌ சேகரித்து வந்தனர்‌. இந்த தூய்மைப்‌ பணி வனத்துறையின்‌ ஆதரவுடன்‌ நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...