அனைத்து வரிகள் கட்டியும் நிலத்திற்கான பட்டா கிடைக்கவில்லை: பதாகைகளுடன் கோவை ஆட்சியரிடம் மனு..!

கோவை வெங்கிட்டாபுரம் ஆர்.கே.நாயுடு லேஅவுட் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் தங்கள் நிலத்திற்கு பட்டா வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: அனைத்து வரிகள் கட்டியும் நிலத்திற்கான பட்டா கிடைக்கவில்லை என பதாகைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கோவை வெங்கிட்டாபுரம் ஆர்.கே.நாயுடு லேஅவுட் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் தங்கள் நிலத்திற்கு பட்டா வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், கோவை மாநகராட்சி 43-வது வார்டில் உள்ள ஆர்.கே.நாயுடு லே அவுட் பிளாக் 10,26,28-ல் இது வரை பட்டா வழங்கப்படவில்லை எனவும், இதுகுறித்து நில அளவை தனி வட்டாட்சியரிடம் கேட்ட போது உரிய விளக்கமளிக்காமல் அலைக்கழிப்பதாக தெரிவித்தனர்.

மேலும், பட்டா இல்லாமலேயே மாநகராட்சிக்கும் மின் வாரியத்திற்கு அனைத்து வரிகளை கட்டி வருவதாக, தெரிவித்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து பட்டா கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அவர்கள் அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி மனு அளித்தனர்.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...