கோவை பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற 5-பேர் கைது..!

கைது செய்யப்பட்ட 5-பேரிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில்வேட்டையாட முயன்ற 5-பேர் கைது, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட சேத்துமடை அருகே உள்ள மாங்கரை வனப்பகுதியில் வெடி சத்தம் கேட்டதாக அங்குள்ள விவசாய தோட்டத்தில் பணியாற்றி வந்த கணேசன் என்பவர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, அங்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் காண்டூர் கால்வாய் வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.



இதையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் காரில் இருந்தவர்கள் கோவையைச் சேர்ந்த மோகனசுந்தரம்(44), பாலசுப்பிரமணியம்(41), சதீஷ்(41), கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(49) மற்றும் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த சதீஷ்குமார்(29) என்பது தெரியவந்தது.

மேலும், இவர்கள் வனப்பகுதிக்குள் சென்று காட்டு பன்றியை வேட்டையாட முயன்றதும், அதற்காக இரண்டு தோட்டாக்களை பயன்படுத்தியதையும் ஒப்புக்கொண்டனர்.



பின்னர், இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடமிருந்துதுப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...