புதிய நெருக்கடி: நூல் விலை 30 முதல் 40 ரூபாய் குறைந்ததால் ஸ்பின்னிங் மில்களில் உற்பத்தி பாதிப்பு.

பஞ்சு விலை சற்று குறைய துவங்கியுள்ளது, ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர் மத்தியில் சிறு ஆறுதல் அளித்துள்ள நிலையில், நூல் விலை திடீரென 30 முதல் 40 ரூபாய் வரை குறைந்துள்ளதால் ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினருக்கு மிகுந்த நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


கோவை: பஞ்சு விலை ஒருபுறம் அதிகரித்து வந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கையால் தற்போது விலை சற்று குறைய துவங்கியுள்ளது. இந்த விலை குறைப்பு ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர் மத்தியில் சிறு ஆறுதல் அளித்துள்ள நிலையில், நூல் விலை திடீரென 30 முதல் 40 ரூபாய் வரை குறைந்துள்ளதால் ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினருக்கு மிகுந்த நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பல மில்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது என தொழில் துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (SISPA) கௌரவ செயலாளர், ஜெகதீஸ் கூறியதாவது: நாடு முழுவதும் 355 கிலோ கொண்ட ஒரு கேண்டி பஞ்சு விலை (Mcu 5 ரகம்) வரலாறு காணாத வகையில் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை கடந்தது. தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக தற்போது வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பஞ்சு இறக்குமதி செய்ய அதிக அளவு புக்கிங் செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற நடவடிக்கைகளால் தற்போது பஞ்சு விலை ஒரு கேண்டி 5 ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது.

ஆனால், மறுபுறம் நூல் விலை 30 முதல் 40 ரூபாய் வரை திடீரென குறைந்துள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பின்னிங் மில்களில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

60's கவுண்ட் நூல் விலை ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென 360 ரூபாயாக குறைந்துள்ளது. ஏற்கனவே, பஞ்சு விலை உயர்வு ஏற்படுத்திய நெருக்கடியிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்து வரும் ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினருக்கு நூல் விலை குறைந்துள்ளது, புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு ஸ்பின்னிங் மில்களில் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர் மீண்டும் மிகுந்த நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்", இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...