பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் - கோவையில் நிறைமாத கர்ப்பிணி பறை இசைத்து டியூப் லைட்டுகளின் மீது நடந்து உலக சாதனை...!

ஒவ்வொரு லைட்டையும் கால்களால் உடைத்தபடி, 3.55 விநாடிகளில் இவர் செய்த இந்த சாதனை பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.


கோவை: பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவையில் நிறைமாத கர்ப்பிணி பறை இசைத்து 30 டியூப் லைட்டுகளின் மீது நடந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.



கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் கலையரசன். பல்வேறு கிராமிய கலைகளை இலவசமாக கற்று கொடுத்து வருகிறார். இவரது மனைவி பிரகலட்சுமி. கிராமிய கலைகளில் ஆர்வமுடைய இவர், தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.



இந்நிலையில் நாடு முழுவதும், அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், இந்த குற்றங்களுக்கான தண்டனை பிரிவு சட்டத்தை கடுமையாக்க வலியுறுத்தியும், பறை இசைத்து, 30 டியூப் லைட்டுகளின் மீது நடந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.



சாதனையின் போது, ஒவ்வொரு லைட்டையும் கால்களால் உடைத்தபடி, 3.55 விநாடிகளில் இவர் செய்தஇந்த சாதனை பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.



சாதனை குறித்து நிறைமாத கர்ப்பிணியான பிரகலட்சுமி கூறுகையில், தற்போது அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான தண்டனைகளை அதிகபடுத்தும் விதமாக சட்ட பிரிவில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும், என்னைப் போன்ற அப்பா இல்லாத பெண்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அப்பாவை போன்று பாதுகாப்பு தர வேண்டும்,என கண்ணீர் மல்க கூறினார்.



Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...