கோவையில் 2 ஆண்டுகளுக்கு பின் அரசு பொருட்காட்சி இன்று முதல் துவக்கம்….!

கோவை மத்திய சிறை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் சுவாமிநாதன் துவக்கி வைத்தனர்.


கோவை: கோவை மத்திய சிறை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் சுவாமிநாதன் துவக்கி வைத்தனர்.



கோவை மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையிலான அனைத்து துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட அரசு பொருகாட்சியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்து, பார்வையிட்டனர்.



இந்த பொருட்காட்சி, காலை 10 முதல் இரவு 10 மணி வரை, 45 நாட்கள் நடைபெற உள்ளது.



பெரியவர்களுக்கு ரூ.15, குழந்தைகளுக்கு ரூ.10 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



இப்பொருட்காட்சியில் செய்தி - மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, உள்ளிட்ட 27 அரசுத் துறைகளும் தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.



மேலும், கோவை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆவின், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய அரசு சார்பு நிறுவனங்கள் சார்பில் 4 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில், தோட்டக்கலை சார்பில் காய்கறிகளை கொண்டு மீன், கிட்டார் வடிவங்களை உருவாக்கி காட்சிப்படுத்தியுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் கூறும் போது: கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு பொருட்காட்சி நடைபெறவில்லை. தற்போது, பொருட்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொருட்காட்சி அரங்கில் போதுமான அளவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசு அறிவித்த கொரோனா விதிமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...