கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல் - தூத்துக்குடியை சேர்ந்தவர் கைது..!

ரூ.36-ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை, கேரளாவில் இருந்து வாங்கி வந்து சட்டவிரோதமாகக் கோவையில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான மதுக்கரை போலீசார் கோவை பாலக்காடு நெடுஞ்சாலை செட்டிபாளையம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சந்தேகத்திற்கிடமாக வந்த நபர்களின் வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த (எக்ஸ்எல் சூப்பர்) இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட போது அதில் ரூ.36 ஆயிரம் மதிப்பிலான 912 கேரளா லாட்டரிகள் இருந்தது தெரியவந்தது.



இதையடுத்து, வாகனத்தில் வந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிடிபட்ட நபர் தூத்துக்குடி மாவட்டம் தான்வில்லை சேர்ந்த விஜயன் (56). என்பது தெரியவந்தது.

மேலும் அவர் வாளையாறு பகுதியில் உள்ள லாட்டரி விற்பனை கடையிலிருந்து லாரிகளை வாங்கி வந்து, கோவை மாநகர் பகுதியில் கணபதி, தண்ணீர்ப்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமாக லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.



இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ.36-ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...