கோவை வால்பாறையில் மக்கள் தொடர்பு முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்..!

வால்பாறையில் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 281-பயனாளிகள் பயனடைந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களின் தேவைகளை அறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்க இன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

வால்பாறையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக கடந்த மூன்று முறை வால்பாறை பகுதியில் சார் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. அதில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு இன்று நடக்கும் முகாமில் பொது மக்களுக்குத் தீர்வு வழங்கப்படும் என்று இந்த முகாம் அறிவிக்கப்பட்டது.

இன்று நடக்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என்று பொது மக்களுக்கு அறிவிப்புகள் வட்டாட்சியர் அறிவித்து இருந்த நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் வரவில்லை அதற்குப் பதிலாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் முகாம் நடைபெற்றது.



வால்பாறை பகுதியில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் இந்த முகாம் நடைபெற்றது. இட வசதியின்றி பொதுமக்கள் நெருக்கமாகக் கூடிநின்று முகாமில் கலந்து கொண்டனர். சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இதில் 23 லட்சத்து 28 ஆயிரத்து 990 மதிப்பில் நிவாரணம் வழங்கப்பட்டது 281-பயனாளிகள் பயன் பெற்றனர்.



இதில் இஸ்திரி பெட்டி 10 தையல் மிஷின் 3, முதியோர் உதவி தொகை 108, இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் 18, குடும்ப அட்டை 15, மகளிர் உதவி தொகை 2, வனத்துறை சார்பாக வனவிலங்கு தாக்கி காயம் அடைந்தவர்கள் 3, ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு மகளிர் உதவி தொகை மற்றும் தென்னை மரக்கன்றுகள் வழங்கி முகாம் நடைபெற்றது.

இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடத்தில் இருந்து பெறப்பட்டது. இதில் சாலை வசதி குடிநீர் வசதி வீட்டுமனைப்பட்டா மாற்றுத் திறனாளிகளுக்கும் வயதானவர்களுக்கு ஓய்வூதியம் போன்றவை வழங்க வேண்டும் என்று மனுக்கள் தரப்பட்டது.

இக்கூட்டத்தில் வால்பாறை மன்ற உறுப்பினர் அமுல் காந்த சாமி, வட்டாட்சியர் விஜயகுமார், துணை வட்டாட்சியர் ஜெகதீஷ், நகராட்சி ஆணையாளர் பாலு வனத்துறை அதிகாரி மணிகண்டன், வெங்கடேஷ், மற்றும் அனைத்து அரசு துறை அதிகரிக்கக் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...