'பிளாஸ்டிக்குக்கு குட் பை.. கோவையில் மீண்டும்-மஞ்சப்பை'.. வழங்கும்‌ பணியினை மேயர்‌ தொடங்கி வைத்தார்..!

மாநகராட்சி மத்திய மண்டலம்‌ காந்திபுரம்‌ பேருந்து நிலையத்திலுள்ள பேருந்துகளில்‌ பொதுமக்களுக்கு மீண்டும்‌ மஞ்சப்பை வழங்கும்‌ பணியினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தொடங்கி வைத்தார்.


கோவை: பொதுமக்களுக்கு மீண்டும்‌ மஞ்சப்பை வழங்கும்‌ பணியினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தொடங்கி வைத்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ காந்திபுரம்‌ பகுதியில்‌ நகரங்களின்‌ தூய்மைக்கான மக்கள்‌ இயக்கம்‌ உறுதிமொழி மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, ஆகியோர்‌ தலைமையில்‌ ஏற்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது.



இதேபோல், மாநகராட்சி மத்திய மண்டலம்‌ காந்திபுரம்‌ மேம்பாலத்திலுள்ள ஒரு தூணில்‌ தூய்மைபாரத விழிப்புணர்வு ஓவியத்திற்கான வர்ணம்‌ பூசும்‌ பணியினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, தொடங்கி வைத்தார்.



மேலும், மாநகராட்சி மத்திய மண்டலம்‌ காந்திபுரம்‌ பேருந்து நிலையத்திலுள்ள பேருந்துகளில்‌ பொதுமக்களுக்கு மீண்டும்‌ மஞ்சப்பை வழங்கும்‌ பணியினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தொடங்கி வைத்தார்.



பின்னர், மாநகராட்சி மத்திய மண்டலம்‌ காந்திபுரம்‌ பகுதியில்‌ நகரங்களின்‌ தூய்மைக்கான மக்கள்‌ இயக்கம்‌ தூய்மைப்பணியினை கல்லூரி மாணவ, மாணவிகளைக்‌ கொண்டு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, தொடங்கி வைத்தார்‌.



இதனிடையே, மாநகராட்சி மத்திய மண்டலம்‌ காந்திபுரம்‌ பேருந்து நிலையத்திலுள்ள பேருந்துகளில்‌ பொதுமக்களுக்கு மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து வழங்குவது குறித்து “என்‌ குப்பை என்‌ பொறுப்பு” என்ற வாசகங்கள்‌ அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, வழங்கினார்.

உடன்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, துணை ஆணையாளர்‌ மோ.ஷர்மிளா, மத்திய மண்டல தலைவர்‌ மீனாலோகு, உதவி ஆணையர்‌ சங்கர்‌, மாநகராட்சி நகர்நல அலுவலர்‌ சதீஷ்குமார்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ வித்யா இராமநாதன்‌, பிரபா ரவீந்திரன்‌, உதவி செயற்பொறியாளர்‌ புவனேஸ்வரி, உதவி பொறியாளர்‌ கமலக்கண்ணன்‌, சுகாதார ஆய்வாளர்கள்‌ சந்திரன்‌, ஜெரால்டு சத்ய புனிதன்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...