கோவையில் விடுதலை போரை நினைவு படுத்தி, வரலாற்றை மீட்கும் மாநாடு - மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு முருகன் காந்தி..!

விடுதலைப் போரை நினைவு படுத்தி, வரலாற்றை மீட்கும் மாநாட்டை நாளை (ஜூன் 12), கோவை காந்திபுரம் பகுதியில் முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்தார்.


கோவை: விடுதலை போரை நினைவு படுத்தி, வரலாற்றை மீட்கும் மாநாடு கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது பேசிய அவர் கிபி 1800-ல், கோவையில் இருந்த கோட்டை, வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்தது, இதன் மூலம் தமிழகம், கேரளா, கர்நாடகா என அனைத்து பகுதிகளிலும், எழுந்த புரட்சியாளர்களின் எதிர்ப்பை வெள்ளையர்கள், உளவு பார்த்து அழித்து வந்தனர் என தெரிவித்தார்.

கொலை, கொள்ளை, வரி விதிப்பு என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிய நாம், வெள்ளையர்களை விரட்ட மக்கள் தங்களது உயிரையும் கொடுக்க தயாராக இருந்து வந்தனர் என்றும் இதன் ஒரு பகுதியாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட போரில் 42 பேர் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு, கோவையில் பல்வேறு பகுதிகளில், சித்திரவதை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த 42 பேரில் பல்வேறு சமூகத்தைச், மதத்தைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்றும், ஜாதி மதம் பாராமல், நடைபெற்ற இந்த போர் இந்திய வரலாற்றில் பதிவு செய்ய பட்டிருக்க வேண்டும் என தெரிவித்தார்.

அப்படியான ஒரு முயற்சியை முன்னெடுக்கும் வகையில் நாளை (ஜூன் 12), கோவை காந்திபுரம் பகுதியில் ஒரு மாநாட்டை முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்தார்.



இந்த மாநாட்டில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முத்தரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு இராமகிருட்டிணன், தமுமுக ஜவாஹிருல்லா உட்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...