கோவையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்; உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர் கைது..!

கோவைப்புதூரில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் தலைமை காவலர் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றி விட்டு தப்பி சென்ற இளைஞரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் இறுதியாண்டு படிக்கும் தனியார் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது.

இதனையடுத்து, தகவலறிந்து அங்கு சென்ற குனியமுத்தூர் காவல் உதவி ஆய்வாளர் சின்ராஜ் மற்றும் தலைமை காவலர் திருநாவுக்கரசு ஆகியோர் சென்று மாணவர்களை தடுக்க முயன்றனர்.

அப்போது, அங்கிருந்த மாணவர்கள் தப்பிச் சென்ற போது, தலைமை காவலர் திருநாவுக்கரசு மீது இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை ஏற்றி விட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக, சுந்தராபுரம் மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் விக்னேஷ் (26) என்ற இளைஞரை கைது செய்தனர்.

விசாரணையில் விக்னேஷ் டிப்ளமோ படித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இவரது நண்பர் ஒருவர் கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில், மாணவர்களிடையே மூன்று நாட்களுக்கு முன் மோதல் ஏற்பட்ட போது, ஒரு தரப்பு மாணவர்களுக்கு ஆதரவாக மாச்சப்பாளையத்தை சேர்ந்த ஜெகன் என்பவருடன் சென்ற விக்னேஷ், போலீசாரிடம் சிக்காமல் இருக்க காவலர் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றி விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து விக்னேஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...