கோவையில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு!

கோவையில் சூலூர் அருகே உள்ள குளத்தூரில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் சூலூர் அருகே உள்ள குளத்தூரில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (32). இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ரகுபதி கோவை சூலூர் அருகே உள்ள குளத்தூரில் அட்டைப்பெட்டி உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் காலை பணிக்குச் சென்ற ரகுபதி அட்டைப்பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தை இயக்கியதாக தெரிகிறது. அப்போது அட்டைகளை வைத்து அடுக்கிக் கொண்டிருந்த போது திடீரென இயந்திரம் செயல்பட தொடங்கியுள்ளது.

இதில் அவரது தலை உள்ளே சிக்கிக் கொண்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு சக ஊழியர்கள் இயந்திரத்தை நிறுத்த முயன்றனர்.



ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக தலை நசுங்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சூலூர் போலீசார் ரகுபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரகுபதி சிக்கி உயிரிழந்த அட்டைப்பெட்டி செய்யும் இயந்திரம் கடந்த சில மாதங்களாகவே பழுதாகி இருந்ததாகவும், அடிக்கடி இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட அட்டைப்பெட்டி நிறுவனத்தின் உரிமையாளர் மீது சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...