பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட அனைத்து கட்சிகள் சார்பில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளரிடம் மனு

பொள்ளாச்சி கிணத்துக்கடவு உள்ளிட்ட ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்தில் இணைத்திட வேண்டும், வடகோவை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.



கோவை: கோவை வடகோவை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் (தபெதிக) உட்பட அனைத்து கட்சிகள் சார்பில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளரிடம் மனு அளித்தனர்.



கோவை அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபையில், சேலம் ரயில்வே துறை சார்பில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஸ்ரீனிவாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட அனைத்து கட்சிகள் சார்பில் தபெதிக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

கோரிக்கைகள்

கோவை பொள்ளாச்சி அகல ரயில் பாதையை முழுமையாக பயன்படுத்த வேண்டும், கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும், மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தரமாக்க வேண்டும், பொள்ளாச்சி கிணத்துக்கடவு உள்ளிட்ட ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்தில் இணைத்திட வேண்டும், வடகோவை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும், வடகோவையில் உள்ள FIC குடோனை இருகூருக்கு மாற்ற வேண்டும், சென்னையில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் இருகூர்- போத்தனூர் வழியாக கோவை ரயில் நிலையம் வந்து செல்லும் வகையில் இருக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.



முன்னதாக, ஆலோசனைக் கூட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிட கழகம் உட்பட அனைத்து கட்சிகளுக்கு அனுமதி வழங்காத நிலையில் போராட்டம் அறிவித்திருந்தனர். இறுதியாக, மனுக்களை பெற்றுக் கொண்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...