'ஆபரேஷன் கந்து வட்டி' -கோவையில் பெண் மீது முதல் கந்து வட்டி வழக்கு பாய்ந்தது…!

ஆப்ரேஷன் கந்துவட்டி அறிமுகமாகி கோவையில் முதல் கந்து வட்டி வழக்கு ஒரு பெண் மீது பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, கந்து வட்டி மற்றும் ஆள் கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க, ஆபரேஷன் கந்துவட்டி என்ற பெயரில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம் அதிக வட்டி கேட்டு மிரட்டுதல், வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்குதல், சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் கந்து வட்டி தொடர்பான வழக்குகள் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (34) என்பவர் பெரிய கடைவீதி போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் தான் சில மாதங்களுக்கு முன்பு சந்திரா என்பவரிடம் ரூ.30,000 வட்டிக்கு வாங்கியதாகவும், அதன் பின்னர் மீண்டும் அவரிடம் ரூ.44,000 வாங்கியதாகவும், ஆனால் அவர் அளித்த கால அவகாசத்திற்கு முன்பாகவே கூடுதல் வட்டியுடன் ரூ.60 ஆயிரம் திருப்பித் தர வேண்டும் என மிரட்டுவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து விசாரித்த போலீசார் பெண் சந்திரா மீது அதிக வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆப்ரேஷன் கந்துவட்டி அறிமுகமாகி கோவையில் முதல் கந்துவட்டி வழக்கு ஒரு பெண் மீது பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...