கோவை சுல்தான்பேட்டை தனியார் தோட்டத்தில் எரிந்த நிலையில் ஆண் சடலம் போலீசார் விசாரணை…!

வதம்பச்சேரி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சடலமாக மீட்கப்பட்டவர் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை சுல்தான்பேட்டை தனியார் தோட்டத்தில் எரிந்த நிலையில் ஆண் சடலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (45). இவருக்கு சுல்தான்பேட்டை அடுத்த சின்னவதம்பச்சேரி பகுதியில் தென்னை தோப்பு உள்ளது. மேலும் அவரது தந்தை ஆறுமுக கவுண்டர் (93) என்பவர் மட்டும் அங்கே உள்ள சிறிய அறையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பரமேஸ்வரி தனது தந்தையை பார்க்க நேற்று மதியம் தோட்டத்திற்குச் சென்றுள்ளார்.



அப்போது பார்த்து விட்டு தோட்டத்திற்கு சென்ற போது தோப்பின் ஒரு பகுதியில் தென்னை மட்டை, ஓலைகளால் எரிக்கப்பட்ட நிலையில் சுமார் 45-50 மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது.

இதையடுத்து, அவர் சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் இறந்தவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை, இதையடுத்து உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் உடல் முழுவதும் எரிந்துள்ளதால் அடையாளம் கண்டறிய முடியாமல் இருந்த நிலையில் வதம்பச்சேரி கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் அளித்த புகார் அடிப்படையில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தற்போது சடலமாக மீட்கப்பட்டவர் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...