கோவையில் மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளுடன் பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி சந்திப்பு..!

இந்நிகழ்வில் இலவச கேஸ் சிலிண்டர், இலவச கழிவறைகள், ஆவாஸ் யோஜனா, கொரோனா காலத்தில் இலவச அரிசி வழங்கிய திட்டம், முத்ரா திட்டம், சாலை வியாபாரிகளுக்கு கடன் திட்டம் என பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகர் பகுதியில் மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி சந்தித்தார்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிகரமாக 8 வருடத்தை கடந்து உள்ளதாகத் தெரிவித்தார். இதில் பாஜகவின் சாதனையைக் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பொதுமக்களுக்கு பாஜகவினர் பரப்பி வருவதாகவும் பிரதமர் இந்தியாவும் மோடி உலக அளவிலான தலைவராக உருவெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் மோடி ஆத்ம நிர்பார், மேக் இன் இந்தியா திட்டங்கள் மூலம் புகழ் பெற்ற உள்ளதாகத் தெரிவித்தார். கடந்த ஆட்சிகளை விட சிறந்த அரசாகச் செயல்பட்டு வருவதாகவும் புகழ்ந்தார். கொரோனா தாக்குதலில் மக்கள் தவித்து வந்த போது தடுப்பூசியை இந்தியாவே தயாரித்து 52 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துள்ளதாகவும் இது இந்தியாவுக்கும் பிரதமருக்கும் பாராட்டுக்களை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இலவச கேஸ் சிலிண்டர், இலவச கழிவறைகள், ஆவாஸ் யோஜனா, கொரோனா காலத்தில் இலவச அரிசி வழங்கிய திட்டம், முத்ரா திட்டம், சாலை வியாபாரிகளுக்கான கடன் திட்டம் என கடந்த எட்டு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இதுவரை தேசம் கண்டிராத சிறப்பான பிரதமராக மோடி உள்ளார் எனவும் தெரிவித்தார். மோடி தலைமையிலான அரசு பாதுகாப்புப் படையை பலப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்த அவர் பாகிஸ்தான், சீனா போன்றவற்றிலிருந்து வரும் தாக்குதல்களை தடுத்து உள்ளோம் எனவும், காஷ்மீரில் அமைதியை கொண்டு வந்துள்ளோம் எனவும் கூறினார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது எனவும் இது போல் பல்வேறு வகையில் செயல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளதாகக் கூறிய அவர் தமிழகத்தில் உள்ள திமுக அரசு விலையை குறைக்காமல் வெறும் குற்றம் மற்றும் சாட்டி வருவதாகச் சாடினார்.

திமுக ஒரு குடும்ப கட்சியாகச் செயல்பட்டு வருவதாகவும் பாரதிய ஜனதா கட்சி ஒரு சேவை கட்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல் திமுக அரசு கவர்னருக்கு மரியாதை கொடுக்காத செயலில் ஈடுபடுகிறது என தெரிவித்த அவர், நீட் மசோதா, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் ஆளுநருக்கான முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

கோவில்களை இடிப்பது தான் திராவிட மாடலா..? எனவும் கேள்வி எழுப்பினார். திமுக அரசு தேர்தலுக்காக கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினார்கள் என தெரியவில்லை என தெரிவித்தார். மேலும் கூலிப்படை ரவுடிசம் அதிகரித்துள்ளது என கூறிய அவர் திமுக அரசு காவல்துறையினரை தவறாக பயன்படுத்தும் அரசாக உள்ளதாகத் தெரிவித்தார்.

திமுக அராஜக செயலில் ஈடுபடுவதாகவும் அதை மக்களுக்கு எடுத்து சொல்லும் தைரியம் பாஜகவிற்கு உள்ளது எனவும் தெரிவித்தார். இதை அண்ணாமலை தலைமையிலான மாநில பாஜக சிறப்பாக செய்து வருவதாகவும் தெரிவித்தார். மோடி திட்டத்தை பிரச்சாரம் செய்வது போல திமுகவின் அராஜகத்தையும் வெளிப்படுத்துகிறோம் எனவும் தெரிவித்தார்.

மோடி நண்பனாக உள்ளார் என்றும் தமிழை முன்னிறுத்தி எங்கும் பேசுகிறார் எனவும் கூறினார். மக்களுடைய பார்வைக்கு திமுக நல்ல கட்சியாக இல்லை என தெரிவித்த அவர் பாஜக சேவை அமைப்பாக கொரோனா காலத்தில் செயல்பட்டது என கூறினார்.

திமுகவின் செயல்கள் தொடர்ந்து பரப்பப்படும் எனவும் ஊழல் இல்லாத ஆட்சியாக பாஜக உள்ளது எனவும் இதுவே நாட்டின் பெருமையை உலக அளவில் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தார்.



இந்நிகழ்வில் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பிரீத்தி லஷ்மி உடனிருந்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...