இடமாற்றம் செய்யப்படும் மதுபான கடைகளை அப்பகுதி மக்கள் வேண்டாம் என்று கூறினால் நிறுத்திவிடலாம்-அமைச்சர் செந்தில் பாலாஜி..!

இந்த ஓராண்டு காலத்தில் தமிழகத்தில் 45 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது என கூறிய அவர் தமிழகத்தில் புதிய கடைகள் இல்லை என்றும் இடமாற்றம் செய்யப்படுகிறது அதனை அப்பகுதி மக்கள் வேண்டாம் என்று கூறினால் அதனை நிறுத்தி விடலாம் என தெரிவித்தார்.



கோவை: கோவையில் இடமாற்றம் செய்யப்படும் மதுபான கடைகளை அப்பகுதி மக்கள் வேண்டாம் என்று கூறினால் நிறுத்தி விடலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.



தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் "அனைவருக்கும் வீடு" கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை முதல்வர் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 829 பயனாளிகளுக்கு தலா 2.10 லட்சம் மானியத்துடன் பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணி ஆணைகளையும் 11 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.

முன்னதாக கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை (ஜூன் 12)முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.



அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இத்திட்டத்திற்காக இன்று கோவை மாவட்டத்திற்கென முதல்வர், 18 கோடியே 45 லட்சம் மதிப்பிலான ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளதாகவும் வரக்கூடிய காலத்தில் மிதமுள்ள பயனாளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்தார்.

இந்த ஓராண்டு காலத்தில் தமிழகத்தில் 45 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது என கூறிய அவர் தமிழகத்தில் புதிய கடைகள் இல்லை என்றும் இடமாற்றம் செய்யப்படுகிறது அதனை அப்பகுதி மக்கள் வேண்டாம் என்று கூறினால் அதனை நிறுத்தி விடலாம் என தெரிவித்தார்.

மேலும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினால் கோவை மாவட்ட மக்களின் குறைகளைத் தீர்க்கும் கோவை 24×7 சேவையில் 8,407 அழைப்புகள் வரப்பட்ட நிலையில் 4,637 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் மீதமுள்ள புகார்களுக்கும் தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சேவை தொடர்ந்து செயல்படும். கவுண்டம்பாளையம் மேம்பாலம் திறப்பு குறித்து கேட்ட கேள்விக்கு "நாளை சந்திப்போம்" என பதிலளித்தார். மேலும் சிலர் தாங்களாகவே திறந்து கொள்வோம் என கூறி வருவதற்கு அவ்வாறு திறந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

வாலாங்குளம் படகு சவாரியில் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்த அவர் சுற்றுலாத்துறை சார்பில் அந்தக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் இது குறித்து கடிதம் அனுப்பப்பட்டு கட்டணம் குறைவிற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் சிலர் ரேஷன் கடைகளில் புகைப்படங்களை வைத்துக் கொள்கின்றனர், இது ஒரு தவறான நடவடிக்கை, என கூறினார்.

மேலும் வரக்கூடிய காலங்களில் கோவை மாவட்டத்திற்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டங்களை முதல்வர் வழங்க உள்ளதாக தெரிவித்தார். அதேசமயம் இன்றைய தினம் மேலும் 45 பயனாளிகளுக்கு 6 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் அரசு உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.



இந்நிகழ்வில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் துணை மேயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...