அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் திருப்பூரில் அரசு பள்ளி ஆசிரியர்களின் விழிப்புணர்வு பேரணி..!

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'நம் பள்ளி நம் பெருமை' மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு நடைபெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் நடைபெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நம் பள்ளி நம் பெருமை மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு நடைபெற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.



இந்த விழிப்புணர்வு பேரணியில் அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு அரசு பணிகளில் 20 சதவீதம் முன்னுரிமை மற்றும் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உயர்கல்வி பயில 7.5% முன்னுரிமை உள்ளிட்ட அரசு பள்ளியின் சிறப்பு அம்சங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு அரசு பள்ளி ஆசிரியர்கள் பேரணியாக சென்றனர்.



மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கி பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியானது, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் முடிவடைந்தது. சுமார் 200க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...