வார்டு எண் 19-க்குட்பட்ட அலமேலுமங்காபுரம் பகுதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கேட்டறிந்த மேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர், தூய்மை பணியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.
கோவை: வடக்கு மண்டலம் வார்டு எண் 19-க்குட்பட்ட பகுதியில், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதேபோல், மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட ஸ்ரீதேவி நகர், மூகாம்பிகை நகரில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர், நேரில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியிலுள்ள வாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களின் தரம் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்து, தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய கூடாது என அறிவுறுத்தினர்.

மேலும், மாநகராட்சி வடக்கு மண்டலம் 19-வது வார்டுக்குட்பட்ட மணியகாரம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர், நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, அப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

இதனிடையே, மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட அலமேலுமங்காபுரம், ஸ்ரீதேவி நகரில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட அலமேலுமங்காபுரம், ஸ்ரீதேவி நகரில் உள்ள அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என்பதையும், உணவுப் பொருட்கள் இருப்பு குறித்த பதிவேடுகளையும் மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர், நேரில் பார்வையிட்டு ஆய்வு
செய்தனர்.

உடன் வடக்கு மண்டல குழு தலைவர் வே.கதிர்வேல், 20-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மரியராஜ், வடக்கு மண்டல உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் (பொ) விமலா, மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.