மூலப்பொருட்கள் விலை குறைந்தும் பயனில்லை: நிலையற்ற விலையால் 1,000-குறுந்தொழில் முனைவோர் கோவையில் தொழிலை விட்டு ஓட்டம்..!

உற்பத்தி தொழில் துறையில் மூலப்பொருட்களின் விலை நிலையற்ற தன்மை காணப்படுவதால் கோவை மாவட்டத்தில் ஆயிரம் குறுந்தொழில் முனைவோர் தொழிலை விட்டு சென்று விட்டதாகவும் ஒரு சிலர் தொழிலாளியாக மாறி வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருவதாகவும் தொழில்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.


கோவை: நிலையற்ற விலையால் 1,000-குறுந்தொழில் முனைவோர்கோவையில் தொழிலை விட்டுசென்று விட்டதாகவும் ஒரு சிலர் தொழிலாளியாக மாறி வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருவதாகவும் தொழில்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (TACT) தலைவர், ஜேம்ஸ் கூறியதாவது:-



உற்பத்தி தொழில் துறையில் ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்கள் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக தாறுமாறாக அதிகரித்தது. இதனால் குறுந்தொழில் முனைவோர் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்கி வரும் சூழலில் இந்த விலையேற்றம் ஏறக்குறைய அனைத்து குறுந் தொழில் நிறுவனங்களையும் கடும் நெருக்கடிக்கு தள்ளியது.

தற்போது விலை குறைந்து வரும் நிலையிலும் விலையில் நிலையற்ற தன்மை நிலவும் காரணமாக ஜாப் வொர்க் கணிசமாக குறைந்து விட்டது. இதனால் பெரும்பாலான நிறுவனங்களில் இயந்திரங்கள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவிவரும் நெருக்கடி காரணமாக கோவை மாவட்டத்தில் ஆயிரம் குறுந்தொழில் முனைவோர் தொழிலை விட்டுச் சென்று விட்டனர். இதில் ஒரு சிலர் வேறு நிறுவனங்களில் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர்.

என் நிறுவனத்தில் நான் 3 லேத் மெஷின்களை தொழில் நெருக்கடி காரணமாக விற்பனை செய்து விட்டேன். அந்த அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. மூலப்பொருட்கள் விலை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.

ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் குறுந்தொழில் நிறுவனங்கள் நெருக்கடியை எதிர் கொள்வது தொடர்கதையாகும்.

கோவை திருப்பூர் மாவட்ட கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (COTMA) தலைவர், சிவகுமார் கூறியதாவது:-



கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காப்பர், ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்கள் விலை டன் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் விலை ஏற்றம் தொடர்ந்து காணப்பட்ட காரணத்தால் மூலப்பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்து 75 ஆயிரம் ஒரு லட்சம் ரூபாய் பல்வேறு விலையில் விற்பனை செய்யப்பட்டன.

நாடு முழுவதும் குறுந்தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கையை விடுத்து வந்த சூழ்நிலையில் சமீபத்தில் மூலப் பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக ஸ்டீல் உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்களின் விலை டன் ஒன்றுக்கு 8,000 ரூபாய் வரை குறைந்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் மேலும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூலப்பொருட்கள் விலை குறைந்த போதும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பயன் பெற முடியாத சூழ்நிலை உள்ளது.காரணம் விலை மேலும் குறையும் என நம்பி ஜாப் வொர்க் வழங்கும் நிறுவனங்கள் அந்த பணியை தற்காலிகமாகக் குறைத்துள்ளனர். மூலப்பொருட்களின் விலை பிரச்சனைக்கு மத்திய அரசு கண்காணிப்புக் குழு அமைப்பது மட்டுமே நிரந்தரத் தீர்வாக அமையும்.

ஒவ்வொரு முறை விலை ஏறும்போது உடனடியாக அதை அமல்படுத்தும் மூலப் பொருட்கள் விற்பனை நிறுவனங்கள். விலை குறையும் போது அதே வேகத்தில் செயல்படுவதில்லை.

மூலப்பொருட்கள் விலை சீராக இருந்தால் மட்டுமே குறுந்தொழில் நிறுவனங்கள் ஜாப் ஒர்க் பெறுவதில் எந்த சிரமமும் இருக்காது.

எனவே தொழில் முனைவோர், அரசு அதிகாரிகள் உள்ளடக்கியகண்காணிப்பு குழுஅமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவேஇப்பிரச்சினைக்குநிரந்தர தீர்வாக அமையும்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...