இந்தியாவில் முதன் முறையாக பயணிகளுடன் உரையாடி உதவி செய்யும் ரோபோட் - கோயம்புத்தூர் விமான நிலையத்தில் அறிமுகம்!

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் என்ற தொழில்நுட்ப ரீதியில் இயந்திர மனிதன் (ரோபோட்) வடிவமைக்கப்பட்டு கோவை விமான நிலையத்தில் பயணிகளிடம் உரையாடி உதவி செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



கோவை: ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் என்ற தொழில்நுட்ப ரீதியில் இயந்திர மனிதன் (ரோபோட்) வடிவமைக்கப்பட்டு கோவை விமான நிலையத்தில் பயணிகளிடம் உரையாடி உதவி செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



"மே ஐ ஹெல்ப் யூ" டெஸ்க் போலவே உதவும் ரோபோ:

நவீன உலகில் இயந்திரம் ஆக்கப்பட்ட வாழ்வியல் முறையில் டெக்னாலஜி பயன்பாடு அதிகரிக்கிறது. அதனடிப்படையில் நாள்தோறும் புதுப்புது கண்டுபிடிப்புகள் அறிமுகமாகி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை விமான நிலையத்தில் இயந்திர மனிதன் (ரோபோட்) ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் என்னும் தொழில்நுட்ப ரீதியில் இயந்திர மனிதன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. விமான நிலையங்களில் உள்ள "மே ஐ ஹெல்ப் யூ" டெஸ்க் பணியாட்கள் செய்யும் உதவிகள் இந்த இயந்திர மனிதன் செய்யும்.

ஆங்கிலத்தில் பேசும் வசதியுடன் புரோகிராம் செய்யப்பட்ட ரோபோ தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து பேசும் விதமாக வடிவமைக்க வல்லுநர்கள் ஆலோசனை:

குறிப்பாக விமான நிலையத்தின் உட்பகுதியில் எது எங்கே இருக்கிறது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எப்படி செல்ல வேண்டும், இலக்கை நோக்கி பயணிப்பதற்கான வழி உள்ளிட்ட அடிப்படை உதவிகள் இந்த ரோபோ செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டு அறிமுகமாகியிருக்கிறது. ஆங்கில மொழியில் உரையாடும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த இயந்திர மனிதன் வரும் காலங்களில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் உரையாடும் விதமாக வடிவமைக்கப்படும் என்று இதனைத் தயாரித்த மும்பை சேர்ந்த தயாரிப்பு நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் டெக்னாலஜி மூலமாக வடிவமைக்கப்பட்ட ரோபோ விமான நிலைய பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்யும்:

இதேபோன்று வழிகாட்டி வழிமுறைகள் மட்டுமின்றி இதர சேவைகள் செய்யும் விதமாகவும் வருங்கால வடிவமைப்புகளில் இடம்பெறும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் அறிமுகமாகியிருக்கும் இந்த இயந்திர மனிதனுக்கு உள்ளாக கோயம்புத்தூர் விமான நிலையத்தின் உட்புற கட்டமைப்பு, வடிவமைப்பு உள்ளிட்டவை இயந்திர மனிதனில் புரோகிராம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு அறிமுகமாகி இருக்கின்றன.



பெங்களூரில் உள்ள தனியார் விமான நிலையமொன்றில் முதன்முறையாக இந்த ரோபோ அறிமுகமாகி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பன்னாட்டு விமான நிலையங்களில் முதல் முறையாக கோவை விமான நிலையத்தில் இந்த ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. வருங்காலத்தில் இதன் பயன்பாட்டை விரிவுபடுத்தவும் விமான நிலைய நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது.



கோவை விமான நிலையத்தில் இந்த ரோபோ அறிமுக விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், போலீஸ் கமிஷனர் பிரதீப் உள்ளிட்டோரும் விமான நிலையத்தின் மேலாளர் செந்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் சந்தோஷ் உள்ளிட்டோரும் இயந்திர மனிதன் அறிமுக விழாவில் பங்கேற்றிருக்கின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...