தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருந்தபோது, சிறுவனின் கால் கட்டை விரலில் விஷப் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: சேத்துமடை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்தார்.
கோவை பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை அன்னப்பாறை மன்னம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (40). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஹரினேஷ் (4).
சிறுவன் நேற்று மாலை வீட்டின் அருகே இருந்த தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது கீழே கிடந்த பந்தை எடுக்க சென்றபோது, அங்கிருந்த விஷப் பாம்பு ஒன்று ஹரினேஷ் கால் கட்டை விரலில் கடித்ததாக தெரிகிறது.
இதில் சிறுவன் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.