கோவையில் பெண் பணியாளர்கள் நலன் மற்றும் மேம்பாடு குறித்த மாநில கருத்தரங்கம்..!

இதில், பெண்கள் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாலியல் சீண்டல் களிலிருந்து தற்காத்துக் கொள்ளுதல் புகார் தெரிவித்தல், மகளிர் பாதுகாப்பிற்கான தமிழக அரசின் செயல்பாடுகள் போன்றவற்றை குறித்து விளக்கினர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், மற்றும் கேர் டி சர்வீஸ் டு எர்த் சார்பில் பெண் பணியாளர்கள் நலன் மற்றும் மேம்பாடு குறித்த மாநில கருத்தரங்கம் நடைபெற்றது.



இதில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி, கலந்து கொண்டு ஏற்புரை வழங்கினார்.



இதில் பேசிய அவர், இந்த தமிழ்நாடு மகளிர் ஆணையம் குறித்தும், பெண்கள் எவ்வாறு ஆணையத்தை தொடர்பு கொள்வது போன்றவற்றை விளக்கினார்.

மேலும், இதில் கலந்து கொண்டு உரையாற்றிய, கோவை கேர் டி திட்ட ஒருங்கிணைப்பாளர் மோத்திராஜ், கோவை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் தங்கமணி, மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் கீதா நடராஜன், உட்பட பலர் பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாலியல் சீண்டல் களிலிருந்து தற்காத்துக் கொள்ளுதல் புகார் தெரிவித்தல், மகளிர் பாதுகாப்பிற்கான தமிழக அரசின் செயல்பாடுகள் போன்றவற்றை குறித்து விளக்கினர்.



இதில் தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இக்கருத்துக்களையும் தகவல்களைக் கேட்டறிந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...