கோவை செல்வபுரம் அருகே அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி இளம் பெண் உட்பட இருவர் பலி..!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



கோவை: கோவை செல்வபுரம் அருகே அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி இளம் பெண் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை பீளமேடு சவுரிபாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் மனோஜ் (19). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் மாலில் பணியாற்றி வந்தார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் பூலுவப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகள் ஆர்த்தி (19). என்பவருடன் தனது இருசக்கர வாகனத்தில் பேரூர் சாலையில் சென்றுள்ளார்.

அப்போது செல்வபுரம் தில்லை நகர் அருகே சென்றபோது முன்னால் சென்ற 56-எண் அரசு பேருந்தை இடது புறமாக முந்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது நிலைதடுமாறிய இரு சக்கர வாகனம் சாலையில் சரிந்து விழுந்தது.



இதில் அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி மனோஜ் மற்றும் ஆர்த்தி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அரசு பேருந்தை ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த பிரபு என்பவரிடம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...