கோவை துடியலூர் அருகே போக்குவரத்து நெரிசலை சீர் செய்த கோவை சரக DIG-முத்துசாமி…!

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்ட நிலையில் அங்கு வந்த கோவை சரக DIG-முத்துசாமி போக்குவரத்து நெரிசலை சீர் செய்தார்.



கோவை: கோவை சரக DIG-முத்துசாமி காரில் வரும் பொழுது போக்குவரத்து நெரிசலில் அவரது கார் சிக்கியது பின்னர் போக்குவரத்தை சீர் செய்ய சாலையில் இறங்கி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

கோவை மேட்டுப்பாளையம் சாலை ஜி.என் மில்ஸ் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு தினமும் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு நிரந்தரமாக போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அங்கு வழக்கமாக இருக்கும் போக்குவரத்து காவலர் வேறு பணிக்குச் சென்ற நிலையில், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.



இந்நிலையில் அவ்வழியாகச் சென்ற கோவை சரக DIG-முத்துசாமி ஜி.என் மில்ஸ் அருகே வந்த போது தனது வாகனத்தை நிறுத்தி அங்கு போக்குவரத்து நெரிசலை சீர் செய்தார்.



அவருடன் பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் உடன் இரு புற சாலைகளிலும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.



இதனால் அங்கு நீண்ட நேரமாக ஒரே இடத்தில் இருந்த வாகனங்கள் நகர்ந்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு போக்குவரத்து காவலர்கள் வரவழைக்கப்பட்டு சீர் செய்யும் பணிகள் நடைபெற்றது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...