கோவை வேலந்தாவளம் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது - ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி பறிமுதல்!

கோவை – கேரளா எல்லையான வேலந்தாவளம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை கே.ஜி.சாவடி போலீசார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை – கேரளா எல்லையான வேலந்தாவளம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை கே.ஜி.சாவடி போலீசார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

கோவை – கேரள எல்லையான வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட எல்லையோரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை, கேரளாவில் இருந்து வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கே.ஜி.சாவடி போலீசார் வேலந்தாவளம் சோதனைச் சாவடி அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவரிடம் கேரளா லாட்டரி இருந்தது தெரியவந்தது, மேலும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்டவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த சக்திவேல் (42) என்பது தெரியவந்தது.

மேலும் இவர் டீக்கடை நடத்தி வந்ததும், கேரளாவில் இருந்து லாட்டரிகளை வாங்கி வந்து தமிழக எல்லைகளில் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதே போல் வேலந்தாவளம் – பிச்சனூர் சாலையில் ரோந்து சென்ற போலீசார் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் லாட்டரி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் பிடிபட்டவர் சூலூரை சேர்ந்த ரவி (56) என்பதும், வழக்கமாக கேரளாவில் லாட்டரிகளை வாங்கி அதை மாவட்ட எல்லை மற்றும் சூலூர் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.



இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...