கோவை குனியமுத்தூர் அருகே தனியார் கல்லூரி மாணவர்களிடையே மோதல்; தடுக்கச் சென்ற போலீஸ் மீது தாக்குதல்…!

மோதலில் ஈடுபட்ட மாணவர்களை தடுக்க முயன்ற குனியமுத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் திருநாவுக்கரசை தாக்கி விட்டு தப்பிச் சென்ற மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் பகுதியில், தனியார் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற காவலரை தாக்கிவிட்டு தப்பிய மாணவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூரை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் நேற்றிரவு தனியார் கல்லூரி இறுதி ஆண்டு படித்து வந்த மாணவர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இது குறித்து, அங்கிருந்த பொதுமக்கள் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, அங்கு வந்த உதவி ஆய்வாளர் சின்ராஜ் மற்றும் தலைமை காவலர் திருநாவுக்கரசு ஆகியோர் அங்கு வந்து, மோதிக்கொண்ட மாணவர்களை தடுக்க முயன்றனர்.

அப்போது, தப்ப முயன்ற மாணவர்கள் தலைமை காவலர் திருநாவுக்கரசை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீஸார் தப்பிச் சென்ற மாணவர்களை தேடி வருகின்றனர். தற்போது, தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...