சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள மர்ம நபரை கண்டறிந்து போலீஸார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: கோவை சுந்தராபுரம் மோகன்நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை போத்தனூரை அடுத்த சுந்தராபுரம் – மதுக்கரை சாலையில் உள்ள மோகன்நகர் பகுதியில், சுமார் 200க்கு மேற்பட்ட வீடுகளும், சிறு குறு தொழிற்சாலைகளும் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் உலா வந்தது வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
குறிப்பாக, நள்ளிரவு நேரத்தில் ஒரு சில வீடுகளை வெளியே இருந்தவாறு கண்காணித்த அந்த மர்ம நபர், அதே பகுதியில் உள்ள வீட்டிற்குள் கேட்டை திறந்து உள்ளே சென்ற மர்ம நபர் உள்ளே நோட்டமிட்டார். அங்கிருந்த நாய் தொடர்ந்து குறைத்ததால் அங்கிருந்து அந்த மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். இதே போல, அங்கிருந்த பல்வேறு வீடுகளையும் நோட்டமிட்டவாறு மர்ம நபர் சுற்றி திரிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளமர்ம நபரை கண்டறிந்து போலீஸார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.