புதிதாக அமைக்கப்பட்ட குழாயினை ஏற்கனவே உள்ள விநியோகக் குழாயில் இணைப்பு ஏற்படுத்தும் பொருட்டு 09.06.2022 முதல் 11.06.2022 தேதி வரை மூன்று தினங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோவை:கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.99 மற்றும் 100-க்குட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட குழாயினை ஏற்கனவே உள்ள விநியோகக் குழாயில் இணைப்பு ஏற்படுத்தும் பொருட்டு 09.06.2022 முதல் 11.06.2022 தேதி வரை மூன்று தினங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்-99 மற்றும் 100-க்குட்பட்ட பகுதிகளுக்கு பில்லூர் 1 திட்டத்தின்கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து குடிநீர் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
மேற்கண்ட குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாய் சிங்காநல்லூர், வெள்ளலூர் சாலை வழியாக
மேட்டூர் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வரை அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி சாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள தரைமட்ட பாலம் புதுப்பித்து கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.
இப்பணியின் காரணமாக இப்பாலத்தின் மீது உள்ள குடிநீர் குழாயை மாற்றியமைக்க வேண்டியுள்ளதால், சாலையின் இருபுறமும் புதிதாக விநியோகக் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட குழாயினை ஏற்கனவே உள்ள விநியோகக் குழாயில் இணைப்பு ஏற்படுத்தும் பொருட்டு 09.06.2022 முதல் 11.06.2022 தேதி வரை குடிநீர் நிறுத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. எனவே, வார்டு எண்.99 மற்றும் 100க்குட்பட்ட பகுதிகளுக்கு 09.06.2022 முதல் 11.06.2022 தேதி வரை மூன்று தினங்களுக்குக் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.